இருப்பதிலேயே பாவப்பட்ட மனிதர்கள் இந்த கடவுள் மறுப்பாளர்கள் தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இவர்களுக்கு மதவாதிகள், சாதியவாதிகள், சனாதனிகள், Just Spiritual, Cosmic Energy சீடர்கள், இறை நம்பிக்கையாளர்கள், அரை குறை நம்பிக்கையாளர்கள், கொஞ்சூண்டு நம்பிக்கையாளர்கள், Pseudo Science பேசுபவர்கள், ஆதி யோகிகள், சங்கிகள், மென்சங்கிகள், வருங்கால சங்கிகள் என எல்லா பக்கமும் அடி விழுவது ஜகஜம். எந்த பக்கமும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், எல்லா பக்கமும் விரோதம் இருக்கும், வீட்டில் கூட விழாக்களுக்கு அழைக்க மாட்டார்கள், கண்டுகொள்ள மாட்டார்கள், 24x7 கண்காணிப்பு பட்டியலிலேயே இருப்பார்கள். வேலை என்றால் இன்னும் சிறப்பு. அவர்கள் இருக்கும் இடமெல்லாம் பதற்றமான பகுதியாகவே கருதப்படும். எப்படா சிக்குவான் ஆப்பு வைக்கலாம் என்று ஒரு கூட்டமே 'கமான் கமான்' என்று காத்திருக்கும். பகுத்தறிவை முன்னிலைப்படுத்திய பெரியார் இருந்தபோதே இவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு, கல்வி முன்னுரிமை, வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருந்தால் இவர்களுக்கான வாழ்வாதாரமும் எதிர்காலமும் உறுதியாகியிருக்கும். பகுத்தறிவுவாதமும் இன
விக்கிப்பீடியா 19 இலட்சம் வாழ்க்கை வரலாறுகளை கொண்டுள்ளது. அதில் 20% பெண்களுடையது. ஆனால், பெண்களைப் பற்றிய பல தலைப்புகள் இன்னமும் முழுமையாக தொகுக்கப்படாமல், முடிக்கப்படாமல் உள்ளன. விக்கிப்பீடியாவை முழுமையான ஒரு அறிவு சார் தளமாக கொள்ள வேண்டுமென்றால் இவை முழுமையடைய வேண்டும். பெண்கள் தினத்தை முதன்மைப்படுத்தி பாலின வேறுபாடுகளை களையவும், ஒடுக்கப்பட்ட குழுக்களை முன்னிலைப்படுத்தவும், பலரை பிரதிநிதிப்படுத்தவும் இம்முயற்சியை விக்கிப்பீடியா எடுத்துள்ளது. இவை தொடர்பாக பல நிகழ்வுகள் உலகம் முழுக்க நடைபெற்று வந்தாலும், மெய்நிகராக மொழிபெயர்ப்பு, கட்டுரை எழுதுதல் என பங்களிக்க விரும்புகிறவர்களையும், குறிப்பாக, Content Writing - Content Editors போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமுடையவர்களையும், ஏற்கனவே என் பதிவுகளில் இத்தகைய ஆர்வத்தை வெளிப்படுத்தியவர்களையும் இதில் பங்களிக்க அழைக்கிறேன். நீங்கள் நேரடியாகவோ அல்லது எங்களுடன் இணைந்தோ தமிழ், ஆங்கிலம், இந்தி அல்லது பிரெஞ்சு விக்கிப்பீடியாவில் பங்களிக்கலாம். மொழிபெயர்ப்பு அல்லது கட்டுரைகள் மட்டும் எழுதி, தொகுத்து பங்களிக்க விரும்புகிறவர்களும் இணையலாம்