ஐயப்பனும் கோஷியும்
Ayyappanum Koshiyum
Malayalam
2020
Thriller - Drama

இருவேறு துருவங்கள் சரியான இடத்தில் சந்தித்துக்கொண்டால் என்னென்ன நடக்கும்? அதுதான் திரைப்படம்.
ஐயப்பன் எனும் உதவி ஆய்வாளர் கோஷி எனும் குரியனை சட்டப்படி கண்டிக்கிறார். அது தண்டனையாக மாறும்போது கோஷி யார் என்பது தெரிய வருகிறது. அதன்பின் ஐயப்பன் என்னவானார், கோஷி அவரை என்ன செய்தார், கோஷியின் அதிகார பலம் அவரை என்னவெல்லாம் செய்தது, ஐயப்பனின் சட்டம் அவரை காப்பாற்றியதா, இறுதியில் வெற்றி பெற்றது ஐயப்பனா கோஷியா என ஒரு Egoist கதையாக சிம்பிளாக முடிய வேண்டிய கதை, இதையெல்லாம் தாண்டி பல விஷயங்களைப் பேசுகிறது.
அது தான் திரைக்கதை. கோஷியை எதிர்த்து ஒரு சாதாரண ஐயப்பனால் என்ன செய்ய முடியும் என்று நினைக்க நாம் துவங்கும்போது ஐயப்பன் யார் என தெரிய வருகிறது. அதன் பின் தொடர்ந்து வேகமெடுக்கிறது படம். பாடல்கள் அருமை. குறிப்பாக, https://www.youtube.com/watch?v=mR2wpadUDUA. காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. படம் முடியும்போது திரைக்கதை சிலிர்க்கிறது. ஒரு நல்ல உணர்வு ஏற்படுவது உறுதி.
ஐயப்பனாக 'பிஜூ மேனன்' கலக்கியிருக்கிறார். அவ்வேடத்தில் வேறு மனிதரை நினைத்துப் பார்க்கவே முடியாது. ப்ரித்திவிராஜ், அவரது தந்தை, ஓட்டுநர் என அனைவரும் அவரவர் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர். எல்லாவற்றையும் விட ஒளிப்பதிவு கண்களை குளிர வைக்கிறது. அட்டப்பாடி வழியாக பயணிக்கத் தூண்டுகிறது. சேட்டன்கள் Film Makingஇல் சிறுத்தைக்குட்டிகள் தான்.
படத்தில் தமிழர்கள் குறித்த சில நுட்பங்களும் பிணைந்திருக்கிறது. அதை தேடிப்போனால் நாம் படர்ந்திருந்த வேர்களின் வரலாறு தெரியும். செய்யத்தான் ஆளில்லை.
படத்தின் போஸ்டர்களை வைத்து சற்றே கதையை யூகித்திருந்தாலும், படம் பேசும் கதை, நடக்கும் களம், பயணிக்கும் பாதை, பதிவு செய்யும் அரசியல் எல்லாம் யூகித்ததை வித பன்மடங்கு பெரிதாக இருந்தது. படம் வழக்கமான மலையாள படங்களை விட சற்றே பெரிது. அவ்வளவுதான்.
![]() |
படத்தின் மேக்கிங்கை நீங்கள் இரசித்தால் legend,
படம் பேசும் அழுத்தமான அரசியலை உணர்ந்தால் நீங்கள் ultra legend.
அன்புடன்,
ஜே
Comments
Post a Comment