Skip to main content

பாவம் கருப்பு!

இருப்பதிலேயே பாவப்பட்ட மனிதர்கள் இந்த கடவுள் மறுப்பாளர்கள் தான். 




மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இவர்களுக்கு மதவாதிகள், சாதியவாதிகள், சனாதனிகள், Just Spiritual, Cosmic Energy சீடர்கள், இறை நம்பிக்கையாளர்கள், அரை குறை நம்பிக்கையாளர்கள், கொஞ்சூண்டு நம்பிக்கையாளர்கள், Pseudo Science பேசுபவர்கள், ஆதி யோகிகள், சங்கிகள், மென்சங்கிகள், வருங்கால சங்கிகள் என எல்லா பக்கமும் அடி விழுவது ஜகஜம். எந்த பக்கமும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், எல்லா பக்கமும் விரோதம் இருக்கும், வீட்டில் கூட விழாக்களுக்கு அழைக்க மாட்டார்கள், கண்டுகொள்ள மாட்டார்கள், 24x7 கண்காணிப்பு பட்டியலிலேயே இருப்பார்கள். வேலை என்றால் இன்னும் சிறப்பு. அவர்கள் இருக்கும் இடமெல்லாம் பதற்றமான பகுதியாகவே கருதப்படும். எப்படா சிக்குவான் ஆப்பு வைக்கலாம் என்று ஒரு கூட்டமே 'கமான் கமான்' என்று காத்திருக்கும்.

பகுத்தறிவை முன்னிலைப்படுத்திய பெரியார் இருந்தபோதே இவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு, கல்வி முன்னுரிமை, வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருந்தால் இவர்களுக்கான வாழ்வாதாரமும் எதிர்காலமும் உறுதியாகியிருக்கும். பகுத்தறிவுவாதமும் இன்னும் சிறந்திருக்கும். குறைந்தது, அண்ணா, கலைஞராவது முயன்றிருந்தால் இந்தியாவில், ஏன் உலகிலேயே ஒரு முன்மாதிரி முயற்சியாக இருந்திருக்கும். இவர்களுக்கும் ஒரு சமூக பாதுகாப்பு கிடைத்திருக்கும். ஆனால், தாங்கள் ஒரு Atheist / பகுத்தறிவுவாதி, கடவுள் மறுப்பாளர் என்று வெளியே சொல்லிக்கொள்ளாமலேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. காலம் முழுக்க ஒரு சீக்ரெட் ஏஜெண்ட் போலவே வாழ்கிறார்கள். பாவம்... கொஞ்சம் பேர் ஆனது ஆகட்டும் என கருப்பு சட்டை போட்டுக்கொண்டு பெரியாரியவாதி என்றாவது அறிவித்துக்கொள்கிறார்கள். எதையும் சாராத கடவுள் மறுப்பாளர்கள் தான் பாவம்.

எதாவது கடவுளுக்கு எதிராக பேசிவிட்டால் எப்போது சோத்துல வெசம் வைப்பாங்களோ என்று தினம் தினம் பயந்து பயந்து வாழும் அந்த அப்பாவி ஜீவன்களுக்கு 'உலக கடவுள் மறுப்பாளார்கள் நாள்' நல்வாழ்த்துகள் ...

God Bless You!

Comments

Popular posts from this blog

மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்த பெரிய மனுசன்

விசில்  சத்தம் கேட்டதும் கொடுத்த ENTRY ..... டாப்படிச்சாச்சு  ....... CHocky Till LUNCH தூங்க வேண்டியது தான் பாக்கி ! மட்டையாகிக்கோ .....  Official Page :  Mowgli ( a ) JiNo

Backpacking ம், சுமைத் தூக்கியும்

Disclaimer Backpacking பற்றி பேசுவதால் இவர் அப்பாடக்கர் என்றோ, Backpacking, Travel Blogging ல் கைத்தேர்ந்த அறிஞர் என்றோ, Professional என்றோ நினைத்துவிட வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுவான வழக்கான 'ஊர் சுற்றி' என்றே அழைக்கும்படி தரைக்கு கீழே தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஐரோப்பாவில் 'நீயெல்லாம் Backpacker என்றால், நாங்க யாரு? ' என்று கேட்பதாலேயே இந்த ஏற்பாடு. நன்றி !!! எனக்குத் தெரிந்து நம்மூரில் Trekking Club இருக்கிறது, Biker Club இருக்கிறது, ஆனால், Backpacking Club இல்லை. ஏன் ? யோசித்துப் பார்த்தால், அதைத்தான் நாம எல்லாருமே பண்ணுறோமே .. அதுக்கு எதுக்கு க்ளப் ?? கட்சிதான் ஆரம்பிக்கணும் ... ஹிஹிஹி... ஆனால், கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, ஏற்காடு, குற்றாலம், கன்னியாகுமரி போக இன்னோவா கார் புக் பண்ணி, இல்ல இன்டிகோ காரில் ஆண்டுக்கு ஒரு தடவை ஒவ்வொரு ஊருக்கு போவது ஊருக்கு போகும் அனுபவத்தை தரும். புதுப்புது ஊர்களைக் காணும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால், அப்படியெல்லாம் தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு போன என்னை டூரிஸ்டுன்னு சொல்லிட்டா...

சுமைத்தாங்கி : லூர்து டயரீஸ் - 2

எல்லோரும் பெட்டி படுக்கையை அறைக்கு கொண்டுப் போய் வைத்துவிட்டு உடனே கோவில் குளம் என்று கிளம்பிட்டாங்க. நமக்குதான் ரொம்ப ஓவர் பக்தியாச்சே. ஊரை சுத்திப்பார்க்க கிளம்பிட்டேன். இதைத்தான் என் அம்மாவும், அப்பத்தாவும் சொல்லுவாங்க. ' ஊரு கிழக்கால போன்னா, நீ மேற்காலல போவ ' என்று. அதைக் கனக் கச்சிதமாக செய்து முடித்தேன். அதற்கு இன்னுமொரு காரணம், கோவில், பூசை மட்டுமல்ல. தங்கியிருந்த அறை இயேசுவை வைத்த கல்லறையை விட மிகச்சிறியதாக இருந்ததும், ஃபேன் கூட இல்லாததும் தான்.