எல்லோரும் பெட்டி படுக்கையை அறைக்கு கொண்டுப் போய் வைத்துவிட்டு உடனே கோவில் குளம் என்று கிளம்பிட்டாங்க.
நமக்குதான் ரொம்ப ஓவர் பக்தியாச்சே. ஊரை சுத்திப்பார்க்க கிளம்பிட்டேன். இதைத்தான் என் அம்மாவும், அப்பத்தாவும் சொல்லுவாங்க.
' ஊரு கிழக்கால போன்னா, நீ மேற்காலல போவ ' என்று.
அதைக் கனக் கச்சிதமாக செய்து முடித்தேன்.
அதற்கு இன்னுமொரு காரணம், கோவில், பூசை மட்டுமல்ல.
தங்கியிருந்த அறை இயேசுவை வைத்த கல்லறையை விட மிகச்சிறியதாக இருந்ததும், ஃபேன் கூட இல்லாததும் தான்.
அடங்குனியா என்றவாறு ஓட்டல் ஓனரை கூப்பிட்டு கேட்டால் சர்வச் சாதாரணமாக 'தட்ஸ் ஆல் மை லார்ட்' என்றார். நான் 'கடுப்பேத்றார் மை லார்ட்' என்று நினைத்துக்கொண்டு அந்த கான்ஜீரிங் பட படிகட்டுகள் வழியாக மீண்டும் அறைக்கு சென்றேன். யோசித்துப் பார்த்துவிட்டு, சரி,
இனியும் தாங்காது என்று அந்தக் கோட்டைக்கு போகும் வழியைத் தொடர்ந்து தேடிக் கிளம்பினேன் . கோவிலுக்கருகில் இருக்கும் பஸ் டெர்மினலில் அதற்கான டிக்கெட் கிடைக்கும் என்றார்கள். அரைகுறையாக விசாரித்ததில் அது Pic du Jer எனப்படும் மலைப் பகுதிக்கு செல்லும் பேருந்து என்று மட்டுமே தகவல் கிடைத்தது. அட கிரகத்த என்று நினைத்தபோதுதான், என் ஆர்வத்தைக் கண்ட என் அசிஸ்டென்ட் உடனே அருகிலிருக்கும் இன்னொரு இடத்திற்கு செல்லலாம் என்றார்.
அந்த இடத்தின் பெயர் Lac de Lourdes.

ஆனால், il-de-france ஐ தாண்டி இது போன்ற முறை எங்குமில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
டிக்கெட்டிற்கு ஒரு மணி நேர செல்லுபடி இருந்தாலும் போகும் இடத்தை வைத்தே அறைக்குத் திரும்புதலை முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றெண்ணி பயணப்பட்டுக்கொண்டிருந்தோம். லூர்து நகரின் மையத்திலிருந்து இருபது நிமிட பயணத்தில், நம்மூர் ஊட்டி லோக்கல் பஸ் பயணம் போல மலைப்பாங்கான இடங்கள் வழியாக பயணித்தால் வந்துவிடுகிறது ' lac de lourdes '.
ஒரு ஏரி, ஒரு கோல்ப் மைதானம், அருகில் ஒரு உணவகம்...
இதுதான் இந்தப் பகுதி.
ஆனால்,
நேரத்தை நிம்மதியாக செலவழிக்க செம ஏற்ற இடம்.
படகுப் பயணமும் உண்டு.
அதன் புகைப்படங்கள் :
இரசனையான மனிதன், சரியான இடத்தில் வீட்டை கட்டியிருக்கார்
சுற்றிலும் மலை
சுதந்திரப் பறவை
வீடு - லாங் ஷாட்
படகு குழாம்
ஆத்தி... இது வாத்துக் கூட்டம் ...
ஒரு ஏழை மீனவர்
கரையிலிருந்து....
கோல்ப் மைதானம்
கடுமையாக உழைத்து படமெடுக்கும் ஒரு புகைப்படக் கலைஞர் (!)
தொடரும் ...
Comments
Post a Comment