Backpacking என்பதை எப்படி அழைக்கலாம்?
'ஊர் சுத்துறது' என்றார் அப்பத்தா.
ஜென்ரலா கேட்கல...
தமிழில் ஏதாவது கலைச்சொற்கள் இருக்கிறதா?
Google Translate இதை முதுகுப்புற மூட்டை என்கிறது.
வேறெதிலும் இதுக்குறித்த சரியான அருஞ்சொற்பொருள் இல்லை.
கிடைத்தவர்கள் தெரிவிக்கவும்.
தஞ்சை - வேளாங்கண்ணி - காரைக்கால் சுற்றுக்கு கிளம்பியபோது
' சுமைத்தூக்கி ' என்று என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு சொன்னது அப்பத்தா.
சுமைத்தூக்கி Mode தான் என்றாலும் அதற்கேற்றவாறு பொருந்தக்கூடிய ஒரு சொல் வேண்டும், காலத்திற்கும் பேசப்படும் அளவிற்கு.
ஐரோப்பா வந்த பிறகு, கிடைத்த காலக்கட்டத்தில் புகைப்படங்கள் எடுக்க பல இடங்கள் கிடைத்ததேயொழிய நாடோடி ஊர் சுற்ற வாய்ப்புகள் அமையவில்லை. யாருப்பா அது கூட்டத்தில் கேர்ள்பிரண்ட் அமையலன்னு சொல்லுறது. அதெல்லாம் கிடையாது.
இதைத்தான் பாரீஸ் ஆதினம்
' டூர் அமைவதெல்லாம் இறைவன் கிடைத்த வரம்.
கூட வர கேர்ள் பிரெண்ட் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை '
- என்கிறார்.
சரி கதைக்கு வருவோம். அப்படி வாய்ப்புகள் ஏதும் அமையாத சமயத்தில்தான் கிட்டியது இந்த ட்ரிப். பாரீஸ் டூ லூர்து. சுமார் 900 + கி.மீ தூரம். காரில் ஒரு நாள் (10 + HRS).
TGV எனப்படும் அதிவிரைவு தொடர் வண்டியில் மிகச்சரியாக 5.45 மணி நேரம். இரவில் மட்டும், எட்டு மணி நேரம். விரைவாகச் சென்று
நடு இரவில் பயணிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.
 |
TGV பயணச்சீட்டு |
முன்னதாக, இரயில் நிலையத்திலேயே இருக்கும் ஆட்டோமெடட் மெஷினில் டிக்கட்டை வைத்து பதிவு செய்துக்கொள்ள வேண்டும். அது நம் டிக்கெட்டில் பொத்தல் போட்டுக்கொடுக்கும்.
'இரயில் பயணங்களில்' என்று பேசத்துவங்கினால் அதுவே சில கட்டுரைகள் இழுக்கும் என்பதால் புகைப்படங்களுக்கும், வரலாறுக்கும் வருவோம்.
லூர்து நகர் என்றாலே கிறித்தவர்களின் 'புனித தலம்' என்றுதான் பெரும்பாலானொருக்குத் தெரியும். ஆனால், அந்நகரம் 1858 ஆம் ஆண்டு மரியாள் காட்சி கொடுத்தபின் தான் உலகத்திற்கு வெளியே தெரிந்தது.
அதற்கு முன் ?
உண்மையில் லூர்து நகர் ரோமர்களின் காலத்தை சேர்ந்தது. குறைந்தது, 1300 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்று நகரின் நடுவே அமைந்துள்ள கோட்டையின் அடிப்படையில் கூறுகிறார்கள்.
லூர்து நகரின் வரலாற்றை கணிக்கும் ஒரு கருவி Château fort de Lourdes என்றழைக்கப்படும் இக்கோட்டை மட்டுமே.
இக்கோட்டை எப்போது கட்டப்பட்டது என்று அறுதியிட்டு கூற இயலவில்லை. கி.பி. 778 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒரு முற்றுகைக்குப் பிறகே வரலாறு துவங்குகிறது. சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வாழிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஊருக்குள் நுழையும்போது இக்கோட்டை என் கண்ணில்பட்டு விட்டபடியால் இதற்கு செல்ல வழியும், நாளும் தேடிக்கொண்டிருந்தேன்.
கடைசியாகப் பார்த்தால்,
அந்தக் கோட்டையின் கீழேதான் நான் தங்கியிருந்த அறையின் தோட்டம் இருந்திருக்கிறது.
இந்த ஊரைப் பற்றி விக்கிப்பீடியாவில் நான் எழுதிக்கொண்டிருக்கும் தொகுப்பு -
லூர்து நகர்
மேலும், இந்த ஊரருகே சில சுற்றுலா இடங்களும் உள்ளன. லூர்து ஸ்பெயினின் எல்லையருகே இருப்பதால் அருகாமை DAX நகரில் நம்மூர் ஜல்லிக்கட்டுப் போல் எருது அடக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மிகப்பாதுகாப்பாய்.
PONT D'ESPAGNE பாலம், லூர்து ஏரி, Pic du Jer எனப்படும் மலையேற்றம் மற்றும் குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன.
'போன் த எஸ்பாய்ன்' ற்கு செல்ல விசா கட்டுப்பாடுகள் உள்ளன.
லூர்து வரலாற்றை விரிவாக விக்கிப்பீடியாவில் எழுதி வருகிறேன். முடிந்ததும் அதன் வரலாற்றை, சிறப்புகளை இங்கே விரிவாகச் சொல்கிறேன்.
அதற்கு முன் புகைப்படங்களைப் பார்ப்போம்.
 |
OPEN பண்ணா... ஆறும் இயற்கை அழகும்தான். |
 |
River Gave de Pau |
 |
ஆலய முகப்பு |
 |
லூர்து அன்னை ஆலயம் |
 |
கோவிலை பார்த்தவாறு இருக்கும் லூர்து அன்னை சிலை |
 |
பச்சக்கிளி கண்ணுக்குள்ளேயே நிக்கிறான் மொமன்ட் |
 |
கோவிலுக்கு அருகிலேயே ஓடும் River Gave de Pau |
 |
சைடு வியூ |
 |
செம உயரம் |
 |
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். எப்படியும் 5K - 10K என் கணக்கு. |
 |
அந்தக் கோட்டை.. வெரி லாங் வியூ |
 |
லூர்து கோவிலின் மேற்புறத்திலிருந்து |
 |
அழகு பொங்கும் கட்டிடக்கலை |
 |
ஓரமாக வைக்கப்பட்டிருந்த பழமையான பியானோ |
 |
ஒவ்வொரு வழியும் ஒரு சிலுவைப் பாதை. கட்டுனவர் dedicated christian போல. |
 |
Mission Chateau du Fort |
(தொடரும்)
Comments
Post a Comment