ஐயப்பனும் கோஷியும் Ayyappanum Koshiyum Malayalam 2020 Thriller - Drama இருவேறு துருவங்கள் சரியான இடத்தில் சந்தித்துக்கொண்டால் என்னென்ன நடக்கும்? அதுதான் திரைப்படம். ஐயப்பன் எனும் உதவி ஆய்வாளர் கோஷி எனும் குரியனை சட்டப்படி கண்டிக்கிறார். அது தண்டனையாக மாறும்போது கோஷி யார் என்பது தெரிய வருகிறது. அதன்பின் ஐயப்பன் என்னவானார், கோஷி அவரை என்ன செய்தார், கோஷியின் அதிகார பலம் அவரை என்னவெல்லாம் செய்தது, ஐயப்பனின் சட்டம் அவரை காப்பாற்றியதா, இறுதியில் வெற்றி பெற்றது ஐயப்பனா கோஷியா என ஒரு Egoist கதையாக சிம்பிளாக முடிய வேண்டிய கதை, இதையெல்லாம் தாண்டி பல விஷயங்களைப் பேசுகிறது. அது தான் திரைக்கதை. கோஷியை எதிர்த்து ஒரு சாதாரண ஐயப்பனால் என்ன செய்ய முடியும் என்று நினைக்க நாம் துவங்கும்போது ஐயப்பன் யார் என தெரிய வருகிறது. அதன் பின் தொடர்ந்து வேகமெடுக்கிறது படம். பாடல்கள் அருமை. குறிப்பாக, https://www.youtube.com/watch?v=mR2wpadUDUA . காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. படம் முடியும்போது திரைக்கதை சிலிர்க்கிறது. ஒரு நல்ல உணர்வு ஏற்படுவது உறுதி. ஐயப்பனாக 'பிஜூ மேனன்' கலக்கியிருக்கிறார். அவ்வேடத்தில...
~WoRK HaRD, Dream BiG ~