Skip to main content

Posts

Showing posts from 2016

சுமைத்தாங்கி : லூர்து டயரீஸ் - 3

லூர்து (Lourdes) நகர்... Opening Shot  

சுமைத்தாங்கி : லூர்து டயரீஸ் - 2

எல்லோரும் பெட்டி படுக்கையை அறைக்கு கொண்டுப் போய் வைத்துவிட்டு உடனே கோவில் குளம் என்று கிளம்பிட்டாங்க. நமக்குதான் ரொம்ப ஓவர் பக்தியாச்சே. ஊரை சுத்திப்பார்க்க கிளம்பிட்டேன். இதைத்தான் என் அம்மாவும், அப்பத்தாவும் சொல்லுவாங்க. ' ஊரு கிழக்கால போன்னா, நீ மேற்காலல போவ ' என்று. அதைக் கனக் கச்சிதமாக செய்து முடித்தேன். அதற்கு இன்னுமொரு காரணம், கோவில், பூசை மட்டுமல்ல. தங்கியிருந்த அறை இயேசுவை வைத்த கல்லறையை விட மிகச்சிறியதாக இருந்ததும், ஃபேன் கூட இல்லாததும் தான்.

சுமைத்தாங்கி : லூர்து டயரீஸ் - 1

Backpacking என்பதை எப்படி அழைக்கலாம்? 'ஊர் சுத்துறது' என்றார் அப்பத்தா. ஜென்ரலா கேட்கல... தமிழில் ஏதாவது கலைச்சொற்கள் இருக்கிறதா? Google Translate இதை முதுகுப்புற மூட்டை என்கிறது. வேறெதிலும் இதுக்குறித்த சரியான அருஞ்சொற்பொருள் இல்லை. கிடைத்தவர்கள் தெரிவிக்கவும். தஞ்சை - வேளாங்கண்ணி - காரைக்கால் சுற்றுக்கு கிளம்பியபோது  ' சுமைத்தூக்கி ' என்று என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு சொன்னது அப்பத்தா. சுமைத்தூக்கி Mode தான் என்றாலும் அதற்கேற்றவாறு பொருந்தக்கூடிய ஒரு சொல் வேண்டும், காலத்திற்கும் பேசப்படும் அளவிற்கு. ஐரோப்பா வந்த பிறகு, கிடைத்த காலக்கட்டத்தில் புகைப்படங்கள் எடுக்க பல இடங்கள் கிடைத்ததேயொழிய நாடோடி ஊர் சுற்ற வாய்ப்புகள் அமையவில்லை. யாருப்பா அது கூட்டத்தில் கேர்ள்பிரண்ட் அமையலன்னு சொல்லுறது. அதெல்லாம் கிடையாது. இதைத்தான் பாரீஸ் ஆதினம் ' டூர் அமைவதெல்லாம் இறைவன் கிடைத்த வரம். கூட வர கேர்ள் பிரெண்ட் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை '  - என்கிறார்.

Backpacking ம், சுமைத் தூக்கியும்

Disclaimer Backpacking பற்றி பேசுவதால் இவர் அப்பாடக்கர் என்றோ, Backpacking, Travel Blogging ல் கைத்தேர்ந்த அறிஞர் என்றோ, Professional என்றோ நினைத்துவிட வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுவான வழக்கான 'ஊர் சுற்றி' என்றே அழைக்கும்படி தரைக்கு கீழே தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஐரோப்பாவில் 'நீயெல்லாம் Backpacker என்றால், நாங்க யாரு? ' என்று கேட்பதாலேயே இந்த ஏற்பாடு. நன்றி !!! எனக்குத் தெரிந்து நம்மூரில் Trekking Club இருக்கிறது, Biker Club இருக்கிறது, ஆனால், Backpacking Club இல்லை. ஏன் ? யோசித்துப் பார்த்தால், அதைத்தான் நாம எல்லாருமே பண்ணுறோமே .. அதுக்கு எதுக்கு க்ளப் ?? கட்சிதான் ஆரம்பிக்கணும் ... ஹிஹிஹி... ஆனால், கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, ஏற்காடு, குற்றாலம், கன்னியாகுமரி போக இன்னோவா கார் புக் பண்ணி, இல்ல இன்டிகோ காரில் ஆண்டுக்கு ஒரு தடவை ஒவ்வொரு ஊருக்கு போவது ஊருக்கு போகும் அனுபவத்தை தரும். புதுப்புது ஊர்களைக் காணும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால், அப்படியெல்லாம் தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு போன என்னை டூரிஸ்டுன்னு சொல்லிட்டா

Fundamentalists & Foreign Nations : பெரும்பாடு

இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ், Middle East பக்கமிருந்து ஐரோப்பாவில் வாழ வருபவர்கள் சொல்கிற கருத்தெல்லாம் இருக்கு பாருங்க. அக்மார்க் இரகம். உடன் படிக்கிற நண்பர்கள் கூறியது, அவர்கள் பன்றிக் கறியை உண்ண மாட்டர்களாம். ஏனென்றால், அதை அவர்கள் மதங்கள் எதிர்க்கிறதாம்.பைபிளில் இதைப்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். சரி, பிறகு ஏன் பன்றிக்கறி பிடிக்கும் என்று கூறும் பிற ப்ரெஞ்சு மாணவர்களை ஏளனமாக பார்க்கிறார்கள் ??? கிறித்தவர்களான அவர்கள் எப்படி பன்றிக்கறி சாப்பிடுகிறார்கள்??? வீட்டில் சமைத்ததை கொண்டு வந்து கொடுத்தால் உண்ண மாட்டார்களாம். ஏனென்றால் அது ஹலால் இல்லையாம். அதும் ஒரு தம்பி கருத்து சொல்லுது, 'உங்களுக்கு சாக்லெட் மூடியிருந்தால் பிடிக்குமா இல்லை திறந்திருந்தால் பிடிக்குமா?? அதேபோல் தான், பெண்கள் முழுதும் மூடியிருந்தால் நல்ல பெண்கள். இல்லாவிட்டால், அவர்கள் திருந்த வேண்டும்' என்று. தலையிலடித்துக்கொண்டேன். இவனுக்கெல்லாம் எப்படி விசா கொடுத்தாங்கன்னே தெரியவில்லை. பிழைப்புக்காக வந்துவிட்டு நாட்டைத் திருத்தும் இவர்களால்தான் ஆசியர்கள் என்றாலே பதறுகிறார்கள் ஐரோப்பாவில். சீனர்கள், ஜ

பாரீஸ் டூ பாண்டிச்சேரி

பிரான்சு... அநேக பாண்டிச்சேரிக்காரர்களின் கனவு. பலர் வந்தும் சேர்ந்துவிட்டார்கள். சிலர் இன்னும் கரையை கடக்க காத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக கரையை கடக்க விரும்பாதிருக்கிறார்கள். நானே ராஜா, என் மண்ணே ராஜாங்கம். ஏனைய நாடுகளை போல பிரான்சு இல்லாவிடினும், தாய் நாட்டை பிரிந்த கொடுந்துயரத்தை அளிக்காவிடினும், முதன் முதலாக கல்விக் கற்க தாயைப் பிரிந்து பள்ளிக்கு செல்லும் குழந்தையைப் போல, கடல் தாண்டி வரும் மனிதர்களை அரவணைத்துக்கொள்கிறது இந்நாடு. இத்தனை காலமுமல்லாது, நான் வாழ்க்கையை கற்றுக்கொள்ள இங்கு வந்திருக்கிறேன். தாய் நாட்டினை பிரிந்தாலும் மனிதர் தளராமலிருக்கக் காரணம், சோர்ந்திருக்கும் நேரத்தில் எப்படியும் ஏதாவது ஒரு தமிழர், தேடி எங்கிருந்தாவது வந்து சிறிது ஆறுதல் தருவார். நல்ல நண்பர்கள் வட்டமுண்டு. இருந்தும் தேடிப்போவதில்லை. இம்மண் தந்த நண்பர்கள் சிலரிடமும் காலம் கிடைத்தால் பேசுவதுண்டு. ஊருக்கு வந்த தகவல் கேட்டதும் அழைத்து அளவளாவி வழிகாட்டும் சில முகமறியா நட்புகளின் ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. கடுங்குளிரில், மெய்வருத்தி பணிபுந