Skip to main content

Posts

Showing posts from August, 2016

சுமைத்தாங்கி : லூர்து டயரீஸ் - 2

எல்லோரும் பெட்டி படுக்கையை அறைக்கு கொண்டுப் போய் வைத்துவிட்டு உடனே கோவில் குளம் என்று கிளம்பிட்டாங்க. நமக்குதான் ரொம்ப ஓவர் பக்தியாச்சே. ஊரை சுத்திப்பார்க்க கிளம்பிட்டேன். இதைத்தான் என் அம்மாவும், அப்பத்தாவும் சொல்லுவாங்க. ' ஊரு கிழக்கால போன்னா, நீ மேற்காலல போவ ' என்று. அதைக் கனக் கச்சிதமாக செய்து முடித்தேன். அதற்கு இன்னுமொரு காரணம், கோவில், பூசை மட்டுமல்ல. தங்கியிருந்த அறை இயேசுவை வைத்த கல்லறையை விட மிகச்சிறியதாக இருந்ததும், ஃபேன் கூட இல்லாததும் தான்.

சுமைத்தாங்கி : லூர்து டயரீஸ் - 1

Backpacking என்பதை எப்படி அழைக்கலாம்? 'ஊர் சுத்துறது' என்றார் அப்பத்தா. ஜென்ரலா கேட்கல... தமிழில் ஏதாவது கலைச்சொற்கள் இருக்கிறதா? Google Translate இதை முதுகுப்புற மூட்டை என்கிறது. வேறெதிலும் இதுக்குறித்த சரியான அருஞ்சொற்பொருள் இல்லை. கிடைத்தவர்கள் தெரிவிக்கவும். தஞ்சை - வேளாங்கண்ணி - காரைக்கால் சுற்றுக்கு கிளம்பியபோது  ' சுமைத்தூக்கி ' என்று என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு சொன்னது அப்பத்தா. சுமைத்தூக்கி Mode தான் என்றாலும் அதற்கேற்றவாறு பொருந்தக்கூடிய ஒரு சொல் வேண்டும், காலத்திற்கும் பேசப்படும் அளவிற்கு. ஐரோப்பா வந்த பிறகு, கிடைத்த காலக்கட்டத்தில் புகைப்படங்கள் எடுக்க பல இடங்கள் கிடைத்ததேயொழிய நாடோடி ஊர் சுற்ற வாய்ப்புகள் அமையவில்லை. யாருப்பா அது கூட்டத்தில் கேர்ள்பிரண்ட் அமையலன்னு சொல்லுறது. அதெல்லாம் கிடையாது. இதைத்தான் பாரீஸ் ஆதினம் ' டூர் அமைவதெல்லாம் இறைவன் கிடைத்த வரம். கூட வர கேர்ள் பிரெண்ட் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை '  - என்கிறார்.