நான் பாட்டுக்கு செவனேன்னு தான்டா இருந்தேன்னு ஒரு காட்சியில் வடிவேல் சொல்லுவார். அப்படித்தான் இருக்கு நம் நாட்டின் மக்கள் நிலைமையும். ஏதாவது ஒரு காரணம் காட்டி நம்மை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும் இவர்களின் சூட்சமம் தான் புரியவில்லை. ஜல்லிக்கட்டு, demonetization, நியூட்ரினோ, hydrocarbon துவங்கி தற்போது பசு மாடு வரை இவ்வளவு நாளாக இல்லாத பிரிவினைவாதம் - வன்முறை - படுகொலைகள் நவீன காலத்திலும் நடைபெறுவது உங்களுக்கு புரிகிறதா? இதெல்லாம் ஏன் நடைபெறுகின்றன, யாரால் நடைபெறுகின்றன என்று என்றாவது சிந்தித்ததுண்டா ?? ஆயிரமாயிரம் கேள்விகள்... தெலுங்கு படங்களில் கொடூரமான வில்லன்களை காட்ட கிராமப்புறத்திலிருப்பது போல களம் அமைப்பர். படிப்பறிவு இல்லாத இடங்களில் இவ்வளவு அக்கிரமங்கள் நடப்பது போல காட்டப்பட்டாலும், தற்காலத்தில் இவையெல்லாம் நம்மை சுற்றி நடப்பது போலவே தோன்றுகின்றன. ஏன் ?
~WoRK HaRD, Dream BiG ~