Skip to main content

Posts

Showing posts from July, 2016

Backpacking ம், சுமைத் தூக்கியும்

Disclaimer Backpacking பற்றி பேசுவதால் இவர் அப்பாடக்கர் என்றோ, Backpacking, Travel Blogging ல் கைத்தேர்ந்த அறிஞர் என்றோ, Professional என்றோ நினைத்துவிட வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுவான வழக்கான 'ஊர் சுற்றி' என்றே அழைக்கும்படி தரைக்கு கீழே தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஐரோப்பாவில் 'நீயெல்லாம் Backpacker என்றால், நாங்க யாரு? ' என்று கேட்பதாலேயே இந்த ஏற்பாடு. நன்றி !!! எனக்குத் தெரிந்து நம்மூரில் Trekking Club இருக்கிறது, Biker Club இருக்கிறது, ஆனால், Backpacking Club இல்லை. ஏன் ? யோசித்துப் பார்த்தால், அதைத்தான் நாம எல்லாருமே பண்ணுறோமே .. அதுக்கு எதுக்கு க்ளப் ?? கட்சிதான் ஆரம்பிக்கணும் ... ஹிஹிஹி... ஆனால், கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, ஏற்காடு, குற்றாலம், கன்னியாகுமரி போக இன்னோவா கார் புக் பண்ணி, இல்ல இன்டிகோ காரில் ஆண்டுக்கு ஒரு தடவை ஒவ்வொரு ஊருக்கு போவது ஊருக்கு போகும் அனுபவத்தை தரும். புதுப்புது ஊர்களைக் காணும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால், அப்படியெல்லாம் தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு போன என்னை டூரிஸ்டுன்னு சொல்லிட்டா...