எல்லாரையும் போல பதினஞ்சாப்பு முடிஞ்சு , அதுக்கு பிராயச்சித்தமா நாலு வருசம் கம்பூட்டரு கம்பெனியில் வேலையப் பாத்துப்புட்டு, அப்பன் ஆத்தா கனவை நனவாக்க மூணு வருசம் , பட்ட கடனை அடைக்க நாலு வருசம் , இப்ப அவங்க பெத்த கடனை அடைக்க ஊருக்கு வாரேன் ... அண்ணனும் துபாய் போய் காண்டிராக்ட் வேலையில செட்டிலாயிடுச்சு . திரும்ப வர நாலஞ்சு வருசம் ஆகும் . என்னாலேயோ மாசத்துக்கு ஒருக்கா கூட ஊருக்கு வர முடியல. சொந்த பந்தத்த பார்க்க முடியல.
~WoRK HaRD, Dream BiG ~