Skip to main content

Posts

Showing posts from April, 2016

பாரீஸ் டூ பாண்டிச்சேரி

பிரான்சு... அநேக பாண்டிச்சேரிக்காரர்களின் கனவு. பலர் வந்தும் சேர்ந்துவிட்டார்கள். சிலர் இன்னும் கரையை கடக்க காத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக கரையை கடக்க விரும்பாதிருக்கிறார்கள். நானே ராஜா, என் மண்ணே ராஜாங்கம். ஏனைய நாடுகளை போல பிரான்சு இல்லாவிடினும், தாய் நாட்டை பிரிந்த கொடுந்துயரத்தை அளிக்காவிடினும், முதன் முதலாக கல்விக் கற்க தாயைப் பிரிந்து பள்ளிக்கு செல்லும் குழந்தையைப் போல, கடல் தாண்டி வரும் மனிதர்களை அரவணைத்துக்கொள்கிறது இந்நாடு. இத்தனை காலமுமல்லாது, நான் வாழ்க்கையை கற்றுக்கொள்ள இங்கு வந்திருக்கிறேன். தாய் நாட்டினை பிரிந்தாலும் மனிதர் தளராமலிருக்கக் காரணம், சோர்ந்திருக்கும் நேரத்தில் எப்படியும் ஏதாவது ஒரு தமிழர், தேடி எங்கிருந்தாவது வந்து சிறிது ஆறுதல் தருவார். நல்ல நண்பர்கள் வட்டமுண்டு. இருந்தும் தேடிப்போவதில்லை. இம்மண் தந்த நண்பர்கள் சிலரிடமும் காலம் கிடைத்தால் பேசுவதுண்டு. ஊருக்கு வந்த தகவல் கேட்டதும் அழைத்து அளவளாவி வழிகாட்டும் சில முகமறியா நட்புகளின் ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. கடுங்குளிரில், மெய்வருத்தி பணிபுந...